செய்திகள்

வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த வாக்களிக்க வந்தேன் – தேசப்பிரிய தெரிவிப்பு

நான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறைத் தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு 65 வயதானாலும், அது ஒரு பிரச்சினையல்ல. மாறாக வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. மக்கள் அச்சமின்றி தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இம்முறை நானும் வாக்களித்திருக்கிறேன் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்காக இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

3 மாதங்களின் பின்னர் மீள பாடசாலைகள் திறப்பு

P.L

சமுர்த்திக் கடன் மானியமாக மாற்றம்

P.L

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

P.L

Leave a Comment