முல்லைத்தீவு மாவட்டத்தில் வேட்பாளர்களது துண்டறிக்கைகளை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆதரவாளர்கள் 5 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் சுயேச்சைக்குழு வேட்பாளரின் துண்டறிக்கைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு தொகை துண்டறிக்கைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை முள்ளியவளை கணுக்கேணிப் பகுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துண்டறிக்கைகளை வாகனத்தில் கொண்டு சென்று விநியோகித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது வாகனமும், அதில் இருந்து பெருமளவான துண்டறிக்கைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் மூவரும் முள்ளியவளை பொலிஸாரால், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
previous post