செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவரின் வாக்கை ஏற்கனவே ஒருவர் செலுத்தியதால் குழப்பம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதி உட்பட்ட சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் வாக்களிக்கச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தவிசாளரின் கணவர் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அவரது வாக்கை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்தமையால் இந்த நிலைமை ஏற்பட்டது. பின்னர் ‘கேட்டுப் பெறும் வாக்குச் சீட்டு’ ஊடாக அவருக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலையிலிருந்து சுமுகமாக இடம்பெற்று வருகின்றது. சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிப்பதற்கு, சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் நேற்று மதியம் சென்றுள்ளார். இதன்போது அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் வாக்களிக்க வரவில்லை என்றும் இப்போதுதான் வாக்களிக்க வந்துள்ளதாகவும் இராமநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் கி.அமல்ராஜ்ஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.

வாக்களிப்பு நிலையத்திலிருந்த கட்சி முகவர்களோ, கண்காணிப்பாளர்களோ வாக்குச் சாவடியில் ஆள் மாறாட்டம் இடம்பெற்றது என எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் வாக்களிக்கக் கோரும் போது அவருக்கு சட்டப்படி, ‘கேட்டுப் பெறும் வாக்குச் சீட்டு’ வழங்கப்படும். அவருக்கும் வழங்கப்பட்டு அவர் வாக்களித்தார்’ என்று அமல்ராஜ் குறிப்பிட்டார்.

Related posts

உலக சமாதான சுட்டியில் 77 ஆவது இடத்தில் இலங்கை

P.L

கொரோனா காவு 11 – குவைத்திலிருந்து வந்த குடும்பஸ்தரே மரணம்

user user

கடந்த 24 மணிநேரத்துள் போதைப்பொருளுடன் 340 பேர் கைது

P.L

Leave a Comment