செய்திகள் பிரதான செய்திகள்

மோசடி குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்!

நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளை மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டீ லக்ஸ்மனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் மோசடிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று மத்திய வங்கி ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தது.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 250 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் தனிநபர் முறைப்பாடுகளே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் நிவாரணம் வழங்கவிடாமல் ஆளுங்கட்சி அரசியல்வாதி இடையூறு!

P.L

அரியாலைவாசிக்கு வைரஸ் தொற்று மிக அதிகம்

user user

நாளை முதல் தொடரூந்து சேவைகள் ஆரம்பம்!

P.L

Leave a Comment