செய்திகள் பிரதான செய்திகள்

சுங்கவரி அற்ற வர்த்தக நிலையங்கள் இன்று முதல் திறப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற வர்த்தக நிலையங்கள்  இன்று (06) முதல்  திறக்கப்படவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம்  மே மாதம் 30  ஆம் திகதிக்குள்ள நாடு தரும்பியவர்களின் நன்மை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யி.எ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய   கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற வர்த்தக நிலையங்கள்     முற்பகல்  8.30 தொடக்கம்  பிற்பகல் 3.30 வரை  திறந்துவைக்கப்படும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய அதிகாரிகள், இலங்கை சுங்க பகுதி குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக நாடுதிரும்பிய நிலையில்  தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்தவர்கள் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் சான்றிதழ், விமான பயண சீட்டு உள்ளிட்ட கடித ஆவணங்களை சேவைகளை பெற்றுக்கொள்ளும் பயணிகள் விமான நிலையத்தில்  சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள்

P.L

தனிமைப்படுத்தல் நிலைய குறைபாடுகள் விரைவில் சீராகும்

user user

கொரோனா – குணமடைந்தவர்கள் 50 ஆக உயர்வு

P.L

Leave a Comment