இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் தமக்கு 2,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகை தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என சபையின் தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சலுகை வழங்குவது தொடர்பில் பரிந்துரை செய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவிடம் வினவியபோது, தமது இறுதி அறிக்கையை நாளை (06) அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பாவனையாளர்களுக்கும் அதிகபட்ச சலுகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நால்வர் கொண்ட குழு மேலும் தெரிவித்துள்ளது.