செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

சிவாஜிலிங்கம் கைது!

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் விவரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

தமிழீழ கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5ஆம் திகதி தமிழீழ கரும்புலிகள் நாளாகும். இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் வடமராட்சியில் பெரும் பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்ட முற்பட்ட போது, கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே தன்னை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர் என்று எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் உரை இன்று

user user

சீனாவில் மீண்டும் கொரோனா

P.L

கிரிக்கெட்பிரபலம் ஹெரோய்னுடன் கைது

user user

Leave a Comment