கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள்

இயக்கச்சியில் முன்னாள் போராளி குடும்பத்துடன் கைது!

உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (3) மாலை வெடிப்பு சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த குடும்பத் தலைவரான தங்கராசா தேவதாசன் (43) கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிகாயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பில், காயமடைந்தவரின் மனைவி பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், கணவன் பெற்றோலை போத்தலில் நிரப்பி வைத்திருந்ததாகவும், விளக்கிற்கு அருகில் கொண்டு சென்றபோது வெடித்ததாகவும் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், இராணுவத்தினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் வெடித்தாலேயே அவர் காயமடைந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

அங்கிருந்து 2 உள்ளூர் தயாரிப்பு குண்டுகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிபொருள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, தவறுதலாக வெடித்தது தெரிய வந்தது. மின் ரின்னுக்குள், சி 4 வெடிமருந்தை வைத்து குண்டு தயாரிக்க முயன்றுள்ளார். அவர் வெடிகுண்டு தயாரித்தது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என காயமடைந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து மடிக்கணினி, 2 உள்ளூர் தயாரிப்பு குண்டுகள், பற்றரி, வயர், கமரா, குழாய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர் பாவித்த, அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய தொலைபேசி அயல் காணிக்குள் வீசப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளத. அத்துடன் கரும்புலிகள் இலச்சினை பொறித்த, கரும்புலிகள் நாள் சுவரொட்டியும் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த 3 பெண்களும் விசாரணைக்காக பளை பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவரின் மனைவி பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் 40 வீதத்திற்கு அதிகமாக எரிகாயமடைந்துக்குள்ளாகியுள்ளார். அவரது சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்படலாமென்பதால், அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் 1994ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட நிலையில், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புனர்வாழ்வின் பின்னர் 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Related posts

கொவிட்- 19 நிதியத்துக்கு 37 மில். ரூபா அன்பளிப்பு

P.L

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெளியாகின

user user

மன்னாரில் 7 பேர் தனிமைப்படுத்தலில்

user user

Leave a Comment