செய்திகள் பிரதான செய்திகள்

மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் கண்காணிப்பில்

கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முகக் கவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் புலனாய்வு அதிகாரிகளும் இந்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகக் கவசங்களை அணிந்த நிலையில் குற்றச் செயல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் பொலிஸார் மேற்படி விஷேட பொலிஸ் குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்படி குழு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு முகக் கவசங்கள் அணியாத சட்டத்தை மதிக்காத சுமார் 2731 நபர்கள் தமது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முகக் கவசம் இல்லாத நபர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சம் முகக் கவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்குத் தேவையான முகக் கவசங்கள் சமூக பொலிஸ் பிரிவின் உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts

மேலும் 10 கடற்படையினர் குணமடைவு!

P.L

நிரம்பி வழியும் கொழும்பு ஐ.டி.எச்

user user

பசுவைக் கொன்ற நபர்களுக்கு பிணை மறுப்பு

P.L

Leave a Comment