உலகச் செய்திகள் செய்திகள்

தனிமைப்படுத்தல் இல்லை பிரித்தானிய அரசு அறிவிப்பு!

59 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கோடை விடுமுறையை கழிப்பதற்காக பெருமளவு சுற்றுலா பயணிகள் பிரித்தானியா வரவுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட நீக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஜேர்மன், நியூசிலாந்து, கிரீஸ், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், தென்கொரியா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 59 நாடுகள் உள்ளடங்குகின்றன.

அமெரிக்கா, சீனா, போர்த்துக்கல், கனடா உட்பட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இலங்கை உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு யாசகர்களும் தனிமைப்படுத்தலில்

user user

இன்று முதல் ஊரடங்கு அமுல்

user user

நாகபூசணிக்கு கொடியேற்றம்

user user

Leave a Comment