இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவாகிய அதிகபட்ச கொரோனாத் தொற்றுகள் இதுவாகும்.
கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் பலியாகியுள்ளதுடன் பலி எண்ணிக்கை 18,655 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது, என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.