சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடு அமெரிக்காவே ஆகும்.
அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்தது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 28, 36,875 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 1,31,477 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இதுவரை பாதிப்பிலிருந்து 11.91 லட்சம் பேர் மீண்டுள்ளதுடன்; 15.14 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.