செய்திகள் பிராந்தியச் செய்திகள் யாழ்ப்பாணம்

உயிர்க் கொல்லி போதைப்பொருளுடன் 50 வயது நபர் கைது!

உயிர்க் கொல்லி போதைப்பொருள்களில் ஒன்றான ஐஸ்ஸை கடத்த முற்பட்ட 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

“சந்தேக நபரிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் 25 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொரும் கைப்பற்றப்பட்டன.

வல்வெட்டித்துறையிலிருந்து வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது பருத்தித்துறையில் வைத்து சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்றும் சிறப்பு அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 100 றைத் தொட்டது

user user

விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!

P.L

சுழன்றடிக்கும் காற்று – பல கிராமங்கள் இருளில்

user user

Leave a Comment