பிரதான செய்திகள் பிராந்தியச் செய்திகள் வவுனியா

ஓமந்தையில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு பஸ் : 20பேர் காயமடைந்தனர்

ஓமந்தையில் சொகுசு பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

எதிரில் வந்த லொறியுடனான விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குறித்த பகுதியிலிருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கட்டுப்பாட்டைத் தளர்த்துவது கொரோனாவை வலுவூட்டும் – WHO எச்சரிக்கை

user user

ஊரடங்கு நடைமுறையால் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 3,000 மில்லியன் இழப்பு

P.L

கைதிகளுக்கு போதைப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்த ஐவர் கைது

P.L

Leave a Comment