செய்திகள் பிரதான செய்திகள்

புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தது யார்? – விசாரணைக்கு ஆணைக்குழு அவசியம் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தல்

புலிகளின் நிதி, கப்பல்கள் உட்பட அவர்கள் வசமிருந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது?. இதன் பின்னணியில் இடம்பெற்ற ‘டீல்’கள் எவை?. அவற்றின் மூலம் செல்வந்தர்களாக ஆகியவர்கள் யார்? என்பவற்றைக் கண்டறிவதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க மேலும் தெரிவித்தாவது:
‘ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றுகுவித்ததாக புலிகள் அமைப்பின் இரண்டாவது தளபதியாக இருந்த கருணா அறிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தொடர்பில் தேசப்பற்றாளர்களின் நிலைப்பாடு என்ன? கோத்தாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்ட தேசப்பற்றாளர்கள் எங்கே? போர்க்குற்றவாளியான கருணாவுக்கு மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் தேசியப்பட்டியல் வாய்ப்பை வழங்கினார். இம்முறையும் அழைப்பு விடுத்துள்ளார். எனவே, உண்மையான தேசப்பற்றாளர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

போர்க்குற்றமிழைத்துள்ள கருணாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும்.
குறிப்பாக புலிகள் அமைப்பின் தலைவர்களாக செயற்பட்டவர்கள் இருக்கின்றனர்.குமரன் பத்மநாதனுடன் இவர்களுக்கு இருந்த கொடுக்கல், வாங்கல்கள் என்ன?, புலிகள் அமைப்பிடம் இருந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது?, அவை மீண்டும் யாரின் கைவசம் சென்றன?, கப்பல்கள் எங்கே?, நிதிக்கு நடைபெற்றது என்ன?, இவற்றின்மூலம் செல்வந்தர்கள் ஆனது யார்?, வியாபார வலையமைப்புக்கு என்ன நடந்தது? என்பவற்றை கண்டறிவதற்காக உடனடியாக சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்’ – என்றார்.

Related posts

கொரோனா தொற்று – 649 ஆக உயர்வு

user user

பெலாருஸ் நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 277 பேர் நாட்டை வந்தடைந்தனர்

P.L

தனியார் வைத்தியசாலையை மூடி ஊழியரைத் தனிமைப்படுத்த நடவடிக்கை

P.L

Leave a Comment