வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் இடம்பெறும் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக நயினாதீவைச் சேர்ந்த 30 பேர் மட்டுமே திருவிழாக்களில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிகாட்டுவானில் வைத்து திருப்பியனுப்பப்பட்டனர்.
நயினாதீவுக்கு வெளியே வதியும் அடியவர்கள் உற்சவங்களில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாததால் தங்கள் இல்லங்களில் விரதம் அனுஷ்டித்து பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அறங்காவலர் சபையினர் வேண்டுகோள் விடுது்துள்ளனர்.