கொரோனாத் தொற்றிலிருந்து உயிர் காக்கும் மருந்தாக ஸ்டீராய்ட் (steroid) செயற்படுவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில மருந்துகள் நோயை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. அந்த வகையில் டெக்ஸாமெதோசான் (Dexamethasone)என்ற ஸ்டீராய்டு (steroid) மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெகவரி என்னும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த மருந்தை நோயாளிகளிடம் பயன்படுத்தியில் மூன்றில் ஒரு பங்கு பேர் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.