செய்திகள் பிரதான செய்திகள்

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும்!

கொழும்பு ஜூன் 15

நாட்டிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கிய தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் இணைந்து விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் அறிவிப்பு வரை பெற்றோர் கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை Video Conference மூலம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

P.L

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது!

P.L

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரத் திட்டம்

P.L

Leave a Comment