பிரதான செய்திகள்

ஜூன் 29 தொடக்கம் நான்கு கட்டங்களாக பாடசாலை மீள ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

கொழும்பு ஜூன் 9

அனைத்து அரசு பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி முதற் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலைகள் 2ஆம் கட்டமாக திறக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன.

அதேபோல் நான்காம் கட்டமாக ஜுலை மாதம் 27 ஆம் திகதி முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலைதிறக்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மினி புயலால் ஆலயம் சேதம்

P.L

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

P.L

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 780 பேர் கைது

P.L

Leave a Comment