செய்திகள் பிரதான செய்திகள்

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் உயர்தர மாணவருக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு


2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடக்கு மாகாண துறைசார் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வளவாளர்களால் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கை வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்கள் வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஒரு வாரத்தின் பின்னர் குறித்த வினாத்தாளுக்கான விடைகள் பி.டி.எவ். ஆகவும், வளவாளர்களின் விளக்கங்களை உள்ளடக்கிய வீடியோவாகவும் இங்கு தரவேற்றம் செய்யப்படவுள்ளன.


இணையத் தள முகவரியான www.edudept.np.gov.lk இல் காணப்படும் model Papers என்பதனை தெரிவு செய்து மாதிரி வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம் 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 100 றைத் தொட்டது

user user

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

P.L

தேர்தல் முறைப்பாடுகளை முன்வைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

P.L

Leave a Comment